கீழடி அருங்காட்சியகம்
கீழடி அகழ்வைப்பகம் (Keezhadi museum) என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள கொந்தகை கிராமத்தில் அமைந்த ஒரு தொல்லியல் அகழ்வைப்பகம் ஆகும். கீழடி அருங்காட்சியகம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 2018 முதல் நடந்த எட்டு கட்ட அகழாய்வுகளில் கிடைத்த பொருட்கள் இந்த அகழ்வைப்பகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது 2023 மார்ச் 5 அன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் திறந்தவைக்கபட்டது. கீழடி அகழ்வைப்பகம் அமைந்துள்ள கொந்தகை ஊரானது மதுரைக்கு தென்கிழக்காக 12 கிலோமீட்டர் தொலைவிலும்.மாவட்ட தலைநகரான சிவகங்கையிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 495 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது கீழடி அகழ்வைப்பக கட்டடம் சுமார் 18.43 கோடி மதிப்பிட்டில் செட்டிநாட்டுக் கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகம் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த அகழ்வைப்பகத்தில் ஆறு காட்சிக்கூடங்கள் அமைக்கபட்டுள்ளன.[5] மதுரையும் கீழடியும் என்பது முதல் காட்சிக்கூடமாகும். இதில் பழங்காலம் ம...